Connect with us

பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தானா.? இணையத்தில் வெளியான புகைப்படம்.!

Untitled Project 2023 08 02T093421.411 1

Actress Gallery

பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தானா.? இணையத்தில் வெளியான புகைப்படம்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். கவின் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் களமிறங்கி நட்புனா என்னா தெரியுமா?  என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். சமீபத்தில் கவின் கதாநாயகனாக நடித்து ஓடிடி.,யில் வெளியான லிஃப்ட் படம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து வெளியான டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

1925441 16

102304875

தனது தனித்துவமான நடிப்பால் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள கவினுக்கு தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகிஸ்தர்கள் வட்டாரத்திலும் மதிப்பு உயர்ந்தது. தற்போது நடிகர் கவின் நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில்  காதலை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

1925445 17

kavin

திருமணப் பெண்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கவின் தனது நீண்டநாள் தோழி மோனிகா என்பவரை ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்ய போவதாக தகவல் வந்தது. தற்போது கவின் திருமணம் செய்யப்போகும் மோனிகா என்பவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top