Connect with us

அரசியலுக்கு வந்த காரணத்தினால் கேப்டனின் நட்பை ஓரம் கட்டிய நடிகர்கள்..! பச்சோந்தியாக மாறி சீரழிந்தவர்.!

vijayakanth 2 1

சினிமா செய்திகள்

அரசியலுக்கு வந்த காரணத்தினால் கேப்டனின் நட்பை ஓரம் கட்டிய நடிகர்கள்..! பச்சோந்தியாக மாறி சீரழிந்தவர்.!

அரசியலிலும் சினிமாவிலும் தனி ஆதிக்கம் செலுத்தியவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தயுமே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. கேப்டன் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்ததால் ஐந்து பிரபலங்கள் அவரை இழந்து திக்கு முக்காடினார்கள்.

vijayakanth police getup 1

இப்ராஹிம் ராவுத்தர்

விஜயகாந்த்- இப்ராஹிம் ராவுத்தர் இருவரின் நட்பு ஊரறிந்த விஷயம்தான். இவர்கள் ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே ஒன்றாக இணைந்து ஓடி ஆடி விளையாண்டு, மதுரை வீதியில் இருவரின் கால் பதியாத இடமே இல்லை. அந்த அளவிற்கு கேப்டனுக்கு நெருக்கமாக இருந்தவர்தான் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர்.

Vijayakanth Rawthar

அருண்பாண்டியன்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் அருண்பாண்டியன்.

vijayakanth arun pandiyan

எண்பதுகளில் விஜயகாந்த்க்கு இருந்த இன்னொரு நெருங்கிய நண்பர் நடிகர் அருண் பாண்டியன். இவர்களின் நட்பு சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தொடர்ந்தது. விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கிய போது, அவருடன் பயணித்த அருண் பாண்டியன் அதன் பின்பு தேமுதிகாவின் இருந்து அதிமுகவிற்கு சென்ற சட்ட உறுப்பினர்களில் அவரும் ஒருவர்.

ராதா ரவி

கோலிவுட்டில் கேப்டனுக்கு நெருக்கமானவர்களில் ஒருவர் நடிகர் ராதாரவி. இவர்கள் இருவருமே சினிமாவில் மிகவும் சிரமப்பட்டு வந்தவர்கள். பல மேடைகளில் ராதாரவி தனக்கும் விஜயகாந்த்க்கும் இடையே இருக்கும் நட்பை பற்றி பேசுபவர்.

vijayakanth radha ravi

80, 90களில் நெருக்கமாக இருந்த இவர்களது நட்பு, கேப்டன் அரசியலில் தீவிரமாக இறங்கிய பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பிளவுபட்டது. கடைசியில் விஜயகாந்த் உடம்பு சரியில்லாத சமயத்தில் கூட கடைசி முறையாக பார்த்து விடலாம் என முயற்சித்த போது இருவரும் சந்தித்து பேசுவதற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

தியாகு

விஜயகாந்த் இறந்த செய்தி வெளியான உடனே, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி கதறி அழுதவர் நடிகர் தியாகு. ஏனென்றால் இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமானது. பெரும்பாலும் கேப்டன் படங்களில் எல்லாம் நடிகர் தியாகுவை பார்க்க முடியும். சுமார் 25 படங்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பின் அவரை இழந்த நடிகர்களுள் நடிகர் தியாகுவும் ஒருவர்.

thiyagu

வடிவேலு

இவர் கேப்டனுடைய படத்தின் மூலம் தான் காமெடி நடிகராக தெரிந்தார். வடிவேலு சினிமாவில் உச்ச காமெடி நடிகராக வளர்வதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான்.

vijayakanth helping actors 5

ஆனால் அந்த நன்றி விசுவாசம் கொஞ்சம் கூட இல்லாமல் கேப்டன் அரசியலுக்கு வந்த பின், அவருக்கு எதிராக இருந்த திமுக கட்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, மேடைகளில் அவரை குடிகாரன் போலவே சித்தரித்து பேசினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top