Connect with us

இறுக்கமான டீசர்ட்டுடன் ஆட்டம்.! ஒரு வருஷம் கழித்து அந்த விசயத்தை செய்த நடிகை சமந்தா.! வைரலாகும் வீடியோ.!

Untitled Project 2023 07 28T212851.354 1

சினிமா செய்திகள்

இறுக்கமான டீசர்ட்டுடன் ஆட்டம்.! ஒரு வருஷம் கழித்து அந்த விசயத்தை செய்த நடிகை சமந்தா.! வைரலாகும் வீடியோ.!

நடிகை சமந்தா

தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை சமந்தா, கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் – சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான இவர், பின்னர் கோலிவுட்டில் சூர்யா, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் அடுத்தடுத்து கூட்டணி அமைத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர்.

samantha thanks1052022m

samanthaaa

அதனை தொடர்ந்து சமந்தா சினிமாவில் பெருமளவில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார். மேலும் அதற்காக அவர் தீவிர சிகிச்சையும் எடுத்து வந்தார். பின் உடல்நலம் தேறிய அவர் தளராமல் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த சாகுந்தலம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

samanthaa

samantha41

இறுக்கமான டீசர்ட்டுடன் ஆட்டம்

இந்நிலையில், சமந்தா மயோசிடிஸ் நோய் வந்ததில் இருந்து ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை போட்டு ஒரு வருடங்களுக்கு மேலாகியுள்ளது. கடைசியாக பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு ஆடி ரீல்ஸ் வீடியோ பகிர்ந்தார். பின் விளம்பர ரீல்ஸ் வீடியோ மட்டுமே பகிர்ந்து வந்த சமந்தா தற்போது தோழியுடன் இறுக்கமான டீசர்ட் – ஷார்ட் ஸ்கிட் அணிந்து ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top