Connect with us

குக்வித் கோமாளி தீபா அக்காவ இது? அவங்க கல்யாணத்தப்ப எப்படி இருந்திருக்காங்க பாருங்க? எவ்ளோ அழகு? வைரலாகும் புகைப்படம்!…

Picture8 scaled

Serial Updates

குக்வித் கோமாளி தீபா அக்காவ இது? அவங்க கல்யாணத்தப்ப எப்படி இருந்திருக்காங்க பாருங்க? எவ்ளோ அழகு? வைரலாகும் புகைப்படம்!…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய குக் வித் கோமாளி சீசன் 2 முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மக்கள் மனதில் தீராத ஒரு இடத்தைப் பிடித்தது…. அதில் கலந்துக் கொண்ட ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு விதத்தில் மனதைப் பறித்தனர்… அந்த வகையில் அதில் கலந்துக் கொண்ட ஒருவர் தான் நம் தீபா… அவரின் கள்ளங்கபடமில்லாத பேச்சினாலும், யாரையும் புண்படுத்தாத அவரின் குணத்தினாலும், அனைவரும் அவரை செல்லமாக தீபா அக்கா என்றே அழைத்தனர்… அந்த அளவுக்கு அவருடைய நகைச்சுவையாக இருக்கட்டும், தன் கஷ்டத்தைக் கூட சிரித்துக்கொண்டே கூறும் அவர் வெகுளித்தனத்தாலும், அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்…

deepa shankar 6 e1623911117540

இவர் வெடிகுண்டு முருகேஷன் என்ற படத்தின் மூலம் பல பேரை வெகுவாக பாதித்திருந்தார்… அவர் நடிப்பில் நம்மை கண்கலங்க வைத்திருப்பார்… அவரே கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரின் நகைச்சுவையான நடிப்பால் நம்மை சிரிக்க வைத்திருப்பார்… அது போல மாயாண்டி குடும்பத்தார் படத்தில் அவரின் அண்ணன் தங்கை பாச நிகழ்ச்சிகள் எல்லாம் பரவலாக பேசப்பட்டது… இவர் தற்போது விஜய் டிவியில், அன்புடன் குஷி சீரியலிலும், மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரையில் அவர் கணவருடன் கலந்து கொண்டிருக்கிறார்…

deepa shanakr 2412023m4

இதில் தற்போது நடந்த விஜய் டெலிவிசன் அவார்ட் நிகழ்ச்சியில், அவரை பல பேர் கிண்டல் செய்ததாகவும், அவர் உருவத்தை வைத்து கேலி செய்திருப்பதாகவும், உருக்கமாக பேசி, அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. நான் தைரியமான பெண், என் அம்மா என்னை அப்படித்தான் வளர்த்திருக்கிறார்.. நிச்சயம் என் திறமையை இவ்வுலகிற்கு காமிப்பேன் என்றெல்லாம் கண்கலங்க பேசியிருந்தார்…

deepa shanakr 2412023m3

இந்நிலையில் தற்போது அவரின் திருமணப் புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது… அதில் அவர் அவ்வளவு அழகாக இருக்கிறார்…. நீங்களே பாருங்கள்.. அழகு என்பது சில காலம் தான், நம் குணமும், திறமையும் தான், நாம் யார் என்பதை இவ்வுலகிற்கு சொல்லும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நம் தீபா அக்கா… மேலும் இது போன்ற சுவாரிசயமான தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்….

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top