Connect with us

அஜித் விஜய் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்த நடிகை சுவலட்சுமியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..! வெளியான அழகிய புகைப்படங்கள்..!

suvalaksmi

Actress Gallery

அஜித் விஜய் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்த நடிகை சுவலட்சுமியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..! வெளியான அழகிய புகைப்படங்கள்..!

நடிகை சுவலக்ஷ்மி

90ஸ் கிட்ஸ்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுவலட்சுமி. 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். பிறகு விஜயுடன் சேர்ந்து லவ் டுடே, நிலாவே வா போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலும் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்தது, மற்ற நடிகைகளை போல முகம் சுளிக்கவைக்கும் உடைகளை அணியாதது போன்ற காரணங்களால் ஆண்கள் மட்டுமின்றி பெண்களை கவர்ந்தவர்.

21 6117b08533a34

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, வங்க மொழிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு நதிக்கரையிலே என்ற படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதுவே இவரது கடைசி படமும் கூட அந்த படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதினையும் பெற்றார்.

1316087112375541 1

அந்த படத்திற்கு பின்னர் திருமணம் செய்துகொண்டு கலிபோர்னியாவில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பின்னரும் இவரைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவருக்கு சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இயக்குனர் ராஜா அவரை அணுகிய போதும் அவர் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

18096rpb 4deena

இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.?

திருமணமான பின்னர் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டார். தற்போது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கிய இவர் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில்  நடிகை சுவலட்சுமி கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Suvalakshmi 1

18096rpb

download 2

Suvalakshmi3 1024x716 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top