யோகி பாபு
யோகி தமிழில் பல படங்களில் நடித்து தவிர்க்க முடியாத காமெடி நட்சத்திரமாக மாறியுள்ளார். யோகி பாபு பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார். இவர் நடித்த பீஸ்ட், கோலமாவு கோகிலா, லவ் டுடே, கோமாளி போன்ற பல படங்களில் இவரது கதாபாத்திரம் பலராலும் பேசப்பட்டு வந்தது.
மேலும், யோகி பாபு ஒரு காலத்தில் வாய்ப்பைத் தேடி அலைந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து விடாமுயற்சியுடன் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இவர் 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் யோகிபாபு கைவசம் அரண்மனை 4, பூச்சாண்டி, வெள்ளை உலகம், மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள் என ஏராளமான திரைப்படங்கள் கைவசம் உள்ளது. அவர் எம்.எஸ் தோனி தயாரித்துள்ள முதல் தமிழ் படமான லெட்ஸ் கெட் மேரிடு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அப்பாவா இது.?
நடிகர் யோகி பாபு தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அதே சமயத்தில் தற்போது இணையதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது அந்த புகைப்படத்தில் இருப்பவர் யோகி பாபுவின் அப்பாவா.? என்று இணையவாசிகளால் கேள்வி எழுப்பப்பட்டு வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.