நடிகை கமலி முகர்ஜி
தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற நிறைய மொழி படங்களில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் தமிழில் வேட்டையாடு விளையாடு எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் மக்களிடையே பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இவர் 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்காம் தேதி இந்தியாவில் உள்ள கொல்கத்தாவில் பிறந்த மாடல் அழகியாவார். இவர் திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பே மாடல் துறையில் பணியாற்றி வந்தவர்.
பிறகு மாடல் துறையின் மூலம் திரைப்படங்களில் அவ்வப்போது நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2004 ஆம் ஆண்டு பிர் மிலேஜே என்னும் திரைப்படத்தில் ஹிந்தியில் முதன் முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தினார். மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த திரைப்படம் வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. கமலினி கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்த இறைவி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே
அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில் கமலினி முகர்ஜி சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற பிரபல விழா ஒன்றில் கலந்துக் கொண்டுள்ளார். அதில் அவர் வெயிட் போட்டு மிகவும் குண்டாக ஆனதால் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் எனவே இதனை பார்த்து ரசிகர்கள் வேட்டையாடு விளையாடு பட நடிகையா இது என ஷாக்காகி உள்ளார்கள்.