சீரியல் நடிகை சங்கீதா
மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோழியாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். மேலும் இவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் கிளாமர் கம்மியாக நடித்து இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி ஆக பதிந்து விட்டார்.
இந்தப் படத்தில் மட்டுமல்லாமல் இவர் வலிமை படத்திலும் நடித்திருக்கிறார்.மேலும் படங்களில் குடும்பப் பாங்கான கேரக்டர்களில் தோன்றக்கூடிய இவர் அதற்கு நேர் மாறாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹாட் போட்டோஸை வெளியிட்டு விடுவார்.
இது ஒருபுறம் இருக்க தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் சமீப நாட்களாக தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வருகிறார்.
ஓபன் டாக்
அதில் சங்கீதா பேசியதாவது “மாஸ்டர் படத்தில் என்னுடைய சீன்ஸ் 3,4 நிமிஷம் தான் வரும்னு எனக்கே தெரியும். ஆனால் மதி என்ற அந்த கேரக்டர் இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு எதிர்பார்க்கல.
மாஸ்டர் பட ஷூட்டிங்கில் லோகேஷ் வரும்போது அசிஸ்டென்ட் டேரக்டர்ஸ் எல்லாம் அனல் மாதிரி பறந்து வேலை செய்வாங்க. அப்போ சார் வருவாரு, பாப்பாரு டக்குனு ஒரு 10 நிமிஷம் எடுப்பாரு போயிட்டே இருப்பாரு, அவ்வளவுதான். கொஞ்சம் கூட அந்த அதட்டி சவுண்டா பேசுறது, பண்றது எதுமே லோகேஷ் பண்ணமாட்டாரு ” என்று சங்கீதா பேசியுள்ளார்.