சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்
வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹே சினாமிகா, வஞ்சகன், வணிகன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வெளிப்படை
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் உங்களுக்கு ஷகீலாவை பிடிக்குமா..? சன்னி லியோனை பிடிக்குமா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிறிது நேரம் யோசித்து விட்டு பதில் அளித்த நடிகை நக்ஷத்ரா நாகேஷ் எனக்கு தனிப்பட்ட முறையில் சன்னிலியோன்-ஐ மிகவும் பிடிக்கும்.
அவர் செய்து வரக்கூடிய பல்வேறு உதவிகள் ஒரு சினிமா நடிகையாகவும் ஜொலித்து வருகிறார். தன் மீது இருந்த மோசமான பிம்பத்தை முழுதாக மாற்றி அமைத்திருக்கிறார். அந்த வகையில், சன்னி லியோனை எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.
நடிகை சன்னி லியோன் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு கோடி கணக்கில் நன்கொடை கொடுத்து உதவி வருகிறார். 300-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களை தத்தெடுத்து அவர்களுடைய கல்வி மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுள்ளார். மேலும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.