நடிகர் சந்தானம்
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். சந்தானத்தின் நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் எப்போதும் பஞ்சமே கிடையாது. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். நடிகர் சந்தானம் அவர்கள் நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 , ஏ1 போன்ற பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதைக் காட்டிலும் கதாநாயகனாக நடிப்பதற்கு அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் இவர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக அமைவதன் காரணமாக இறுதியில் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாவதற்கு வழிவகுத்தது.
மகளின் புகைப்படம்
2004ம் ஆண்டு சந்தானத்திற்கு உஷா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹாசினி என்ற மகளும், நிபுன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் நடிகை சந்தானத்தின் மகள் ஹாசினியின் புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என பார்த்து வருகின்றனர்.