அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருபவர் அனிருத். இவரின் இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்துக்கும் பட்டி தொட்டி எங்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் இசையமைத்தாலும் சரி பாடினாலும் சரி சிறியவர் முதல் பெரியவர் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்து விடுகிறது.
அனிருத் முதலில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த நிலையில் தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இதுவரை அனிருத் 30 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அந்த அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது தமிழை தாண்டி தெலுங்கு படங்களுக்குகூட அனிருத் இசையமைக்க தொடங்கியிருக்கிறார். அண்மையில் அனிருத் நடத்திய இசைகச்சேரிகள் செம ஹிட்டாகிய நிலையில், அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
பிரியா ஆனந்த்:
தமிழ் சினிமாவில் “வாமனன்” படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். இவருக்கு எந்த படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஒருசில திரைப்படங்களில் நடித்தாலும் நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும், சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த “எதிர் நீச்சல்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
கொஞ்ச நாட்கள் பிரியா ஆனந்தை டேட்டிங் செய்த அனிருத் அதன்பின் கழட்டிவிட்டார். இது எப்படியோ மீடியாவிற்கு தெரிந்ததும் பிரியா ஆனந்த், ‘நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும்தான்’ என்று பகீர் பேட்டியை அளித்தார்.
கீர்த்தி சுரேஷ்:
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி முருகன் படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். பின்னர் அவர் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அனிருத் இசையமைத்த ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அந்த சமயத்தில் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து டேட்டிங் செய்தனர். இவர்கள் தனியா நிறைய இடத்துக்கு போய் மாட்டிக்கொண்டனர்.
அதுமட்டுமல்ல நைட் பார்ட்டியில் இருவரும் நெருக்கமாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியானது.
ரித்திகா சிங்:
நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதற்கு பிறகு விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் அவருடன் ஜோடி சேர்ந்து தலா ஒரு படங்களில் நடித்துள்ளார் ரித்திகா சிங்.
அனிருத்தின் டேட்டிங் லிஸ்டில் இருந்த நடிகைகளில் புது வரவு தான் ரித்திகா சிங். முதலில் அனிருத்துடன் நண்பராக பழகிய ரித்திகா, பின் அவருடைய காதல் வலையில் விழுந்து டேட்டிங் செய்தார்.
பிரியங்கா மோகன்:
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார் பிரியங்கா மோகன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலை அள்ளிய டான் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார் இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார் இந்த படத்தின் போது தான் பிரியங்கா மோகன் மற்றும் அனிருத் இருவருக்கும் ரிலேஷன்ஷிப் ஏற்பட்டது அது டேட்டிங் வரை சென்றது.
ஜோனிதா காந்தி:
அனிருத் இசையில் தொடர்ந்து பல பாடல்களை பாடி வருபவர் தான் ஜோனிதா காந்தி. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘செல்லமே’ என்ற பாடலை அனிருத் இசையில் ஜோனிதா காந்தி பாடினார். செல்லமே செல்லமே சாங்க பாடி செல்லங்கள் ஆயிட்டாங்க.
இந்தப் பாடலுக்கு பிறகு தான் இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து டேட்டிங் செய்தனர். இருவரும் காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது, இவர்கள் இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட அவுட்டிங் புகைப்படங்களும் டேட்டிங் புகைப்படங்களும் வெளியாகி, அதை உறுதிப்படுத்துகிறது. விரைவில் திருமணம் செய்யும் ஐடியாவிலும் இருக்கின்றனர். இது எவ்வளவு நாளைக்குன்னு தெரியல.