அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருபவர் அனிருத். இவரின் இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்துக்கும் பட்டி தொட்டி எங்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் இசையமைத்தாலும் சரி பாடினாலும் சரி சிறியவர் முதல் பெரியவர் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்து விடுகிறது.
அனிருத் முதலில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த நிலையில் தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இதுவரை அனிருத் 30 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அந்த அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது தமிழை தாண்டி தெலுங்கு படங்களுக்குகூட அனிருத் இசையமைக்க தொடங்கியிருக்கிறார். அண்மையில் அனிருத் நடத்திய இசைகச்சேரிகள் செம ஹிட்டாகிய நிலையில், அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
ஷாக் ஆன ரசிகர்கள்
அனிருத் சில வருடங்களுக்கு முன் நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருந்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து சர்ச்சையில் சிக்கியது. இதன்பின் பெரும்பாலும் எந்த நடிகையுடனும் கிசுகிசுக்கப்படாமல் இருந்து வந்த அனிருத், சில மாதங்களாக பிரபல 45 வயது நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.
திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அந்த நடிகையும், அனிருத்தும் நெருக்கமான காதல் உறவில் இருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல் வெளியானது. அது மட்டுமின்றி அந்த நடிகையின் பிறந்தநாள் பார்ட்டியில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட வெளிவந்தது.
இதனால் ஹாலிவுட் நடிகை பூஜா குமாரியுடன் அனிருத் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்தன. கமல் நடிப்பில் உருவாகி வரும் வி ஸ்வரூபம் படத்தின் முக்கிய கதாபாத்திரம் நடிகை பூஜா குமாரி.