மாநகரம் மற்றும் கைதி திரைப்படத்தை இயக்கியவர் லோகேஷ். இவர் இந்த இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இடம்பிடித்தவர். கார்த்தி நடிப்பில் உருவான கைதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 100 கோடி வசூலை எட்டியது. விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்தவர் நடிகை லின்டு ரோனி.
இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் அது மட்டும் இன்றி சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் பணிபுரியும் ரோனி எய்ப்பன் மேத்யூ என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டிருந்தார்.
குழந்தை பிறப்பை லைவ்வாக வீடியோ எடுத்து வெளியிட்ட விஜய் பட நடிகை
திருமணமாகி 9 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான அவர் கர்ப்பமானதிலிருந்து குழந்தை பெறுவது வரை உள்ள வீடியோவை தொகுத்து எனது யூடியூபில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அதே சமயம் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.