கார்த்தி – தமன்னா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பிறகு கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தார்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான தனுஷ், சூர்யா, விஜயுடன், ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்.
இப்படி முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவை பார்த்து பல பிரபலங்கள் வழிந்ததும் உண்டு, அது மட்டுமல்லாமல் ஒரு சில பிரபலங்கள் இவர் மீது காதல் வயப்பட்டு அவர் பின்னாடியே சுற்றியதும் உண்டு. அப்படி அவர் மேல் காதல் வயப்பட்டு அவர் பின்னாடி சுத்தி வந்தவர்களில் ஒருவர்தான் நடிகர் கார்த்தி.
பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறிய நடிகர் கார்த்தி அதன் பிறகு காதல் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். 2019 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா சேர்ந்து நடித்திருப்பார்கள்.
வீடியோ
ஆனால் அப்போது பையா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை தமன்னாவை காதலித்து வந்திருக்கிறார். இது சிவக்குமார் காதிற்கு செல்ல உடனே இருவரின் காதலை பிரித்ததோடு பையா படம் வெளியான அடுத்த ஆண்டு 2011ல் சினிமாவை சாராத ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார் சிவக்குமார்.
அதன்பின் பல ஆண்டுகள் கழித்து தமன்னாவுடம் சிறுத்தை, தோழா போன்ற படங்களில் ஜோடியாகவும் நடித்தார் நடிகர் கார்த்தி. தற்போது ஜப்பான் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த தமன்னாவுடம் மேடையில், அடடா மழடா அடை மழைடா பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இதை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.