ஹனி ரோஸ் வர்கீஸ்
மலையாள சினிமாவை முதன்மையாகக் கொண்டு செயல்படும் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் சில தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து பிற மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். 2005 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாய் ஃப்ரெண்ட் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் அவருக்கான திருப்புமுனை பாத்திரம் 2012 இல் திருவனந்தபுரம் லாட்ஜ் என்ற படத்தின் மூலமாகதான் வந்தது.
ஹனி ரோஸ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சமீபத்தில் வீர சிம்ஹா ரெட்டி (2023) படம் மூலமாக தெலுங்கில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தார். அந்த படத்தில் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படம் பிளாக்பஸ்டர் ஆனது.
இந்தியாவின் கேரளாவில் உள்ள தொடுபுழா அருகே உள்ள மூலமட்டத்தில் ஒரு மலபார் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். S.H.E.M உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ஆலுவாவிலுள்ள செயின்ட் சேவியர்ஸ் மகளிர் கல்லூரியில் கம்யூனிகேட்டிவ் ஆங்கிலத்தில் இளங்கலை கலைப் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்க இப்படி பண்ணுவீங்க-ன்னு எதிர்பார்க்கல.
தெலுங்கில் அதிக வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர வாய்ப்புள்ளதாக சினிமா நிபுணர்கள் கூறுகிறார்கள். தன்னுடைய பின்னழகை தன்னுடைய பிரதான கிளாமர் அப்பீலக நம்பும் இவர் எங்கு வந்தாலும் தன்னுடைய பிரம்மாண்ட பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளையே விரும்பி அணிகிறார்.
இந்நிலையில், பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை ஹனி ரோஸ் அந்த படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கவுள்ள விஷயம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள், நீங்க இப்படி பண்ணுவீங்க-ன்னு எதிர்பார்க்கல.. வருத்தமா இருக்கு.. என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.