நடிகை கௌதமி
தமிழ் சினிமா ரசிகர்களால் 80களில் கொண்டாடப்பட்ட நடிகை தான் கௌதமி, இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரையிலும் கலக்கினார். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவருடைய முழு பெயர் கவுதமி தடிமல்லா. இவர் 1987ஆம் ஆண்டு தயமாயுடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். அதன் பின்னர் தமிழ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அதன் பின்னர் 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபருடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவுதமி. ஆனால் 1999ஆம் ஆண்டு இருவரும் தகருத்து வேறுபாடு விவாகரத்து பெற்றுவிட்டனர். 2004ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார், பின் 2016ம் ஆண்டு அவருடனும் பிரிந்து இப்போது தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
ஆடம்பரமாய் வாழ்ந்த நடிகை கௌதமியின் தற்போது சொத்து மதிப்பு
இந்த நிலையில் 90கள் காலப்பகுதியில் கொடிக்கட்டி பறந்த கௌதமி தற்பொழுது சுமார் 50 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் வாழ்ந்து வருகிறார். அத்துடன் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதுடன், Costume Designing பணியையும் சிறப்பாக செய்து வருகிறார்.