Connect with us

உடல் நலக்குறைவால் பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி

bijili r 1

சினிமா செய்திகள்

உடல் நலக்குறைவால் பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ் யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலம் பிரபலமானார். வித்தியாசமான இவரது பேச்சு மற்றும் நடவடிக்கைகள் பொதுமக்களை கவர்ந்தது.
bijili 34
கூலி வேலைக்கு சென்று வந்த பிஜிலி ரமேஷ் யூடியூப் பிரபலம் ஆனதால் வேலைக்கு செல்வதிலும் சிக்கல் இருந்ததாக ஒரு நேர்காணலில் பகிர்ந்துக்கொண்டார்.
bijili r
அதன்பின்னர் சில படங்களிலும் பிஜிலி ரமேஷ் தலையை காட்டினார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி ஆனார். அதன்பின்னர் பொன்மகள் வந்தாள், ஆடை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
bijili 1
சினிமாவில் நகைக்சுவை நடிகராக வலம் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
bijili

நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலைியல் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

bijili 56

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top