பிக் பாஸ் சீசன் 7 நேற்று தொடங்கியிருக்கும் நிலையில், முதல் நாளிலேயே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் வழி வகுத்து விட்டது விஜய் டிவி.
கூல் சுரேஷ் உள்ளே நுழைந்தவுடன் அவரிடம் கேப்டன் பதவி ஆசையை காட்டி மொத்தமாக மோசம் செய்ததோடு, கூல் சுரேஷ் அராத்தி பூர்ணிமா கேட்கும் பொழுது கேப்டன் பதவியை விட்டுக் கொடுக்காமல் ரவீனாவுக்கு விட்டுக் கொடுத்தது சர்ச்சையாக இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் முதல் நாளான இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் வீட்டின் தலைவரான விஜயை குறைவாக கவர்ந்த ஆயிஷா, நிக்ஷன், பாவா செல்லதுரை, வினுஷா தேவி, ரவீனா, அனன்யா ஆகிய ஆறு பேரும் இன்னொரு வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர்.
திரும்பவும் பழைய வீட்டுக்கு வந்த பிறகு நான் உங்களுடன் பேசுவேன் என பிக் பாஸ் அறிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் காரணத்தை கொண்டும் நீங்கள் இந்த வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என கண்டிஷன் போடுகிறார்.