Connect with us

விஜய்யின் லியோ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Untitled Project 66 1

சினிமா செய்திகள்

விஜய்யின் லியோ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

தொகுப்பாளினி அர்ச்சனா

90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான “காமெடி டைம்” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள்.

Archana RJ

22 638095053924a

தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகினார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார். அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அதற்கு இருந்தது. அதே போல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

archana zaara2112020c1 down 1662798300

screenshot18351 1667306274

வைரலாகும் வீடியோ

விஜய்யின் லியோ பட நா ரெடி பாடலுக்கு பலரும் ரீல்ஸ் வீடியோ உருவாக்க தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா  “நா ரெடி” பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அவரது நடன வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top