அறந்தாங்கி நிஷா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமாகி தனது கலகலப்பான பேச்சாலும், எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத குணத்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.
தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது திறமையால் மட்டும் முன்னேறிய அறந்தாங்கி நிஷா தற்போது தொகுப்பாளினியாகவும், வெள்ளித்திரையில் ஏராளமான படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்து வருகிறார்.
நிஷாவின் கணவர் ரியாஸ். இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சென்னை மக்களின் பரிதாபத்தை கண்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும், தன்னார்வ நிறுவனங்களும் சென்னையை சேர்ந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டு வந்தனர்.
புகைப்படங்கள்
அந்த வகையில், சென்னையை சேர்ந்த மக்களுக்கு சின்னத்திரை பிரபலமான அறந்தாங்கி நிஷா பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இப்படி பிரபலமாக திகழ்ந்துவரும் இவர் முதல் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.