Connect with us

கடைசி வரை கிடைக்காத உதவி.. புற்றுநோயால் அவதிப்பட்டு இறந்த அங்காடி தெரு பட நடிகை சிந்து..! அதிர்ச்சியில் திரையுலகம்.!

Untitled Project 2023 08 07T094523.589 1

சினிமா செய்திகள்

கடைசி வரை கிடைக்காத உதவி.. புற்றுநோயால் அவதிப்பட்டு இறந்த அங்காடி தெரு பட நடிகை சிந்து..! அதிர்ச்சியில் திரையுலகம்.!

நடிகை சிந்து

வசந்த பாலன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படம் பல்வேறு விருதுகளை கூட குவித்து இருந்தது. இந்தப் படத்தில் விலைமாதுவாக இருந்து அதன்பின்னர் நடைபாதை வியாபாரியான குள்ள மனிதரை திருமணம் செய்து கொண்டு சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து.

image 161

இவர் நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி, கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.மேலும், இவர் படங்களில் மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ அங்காடித்தெரு திரைப்படம் தான்.

screenshot5721 1671611700

இப்படி ஒரு நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகை சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகை சிந்து கடந்த சில நாட்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

23 64d058875914b

அதிர்ச்சியில் திரையுலகம்

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகை சிந்து மரணமடைந்துள்ளார். 42 வயதாகும் நடிகை சிந்துவின் மரண செய்தியை கேட்டு திரையுலகில் உள்ள பலரும் அதியடைந்துள்ளனர். மேலும் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

1 121

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top