நடிகை அமலா பால்
கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படம்தான் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம்.
தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது.
விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த தலைவா திரைப்படம் இவரது திரை பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படத்தை இயக்கிய ஏ எல் விஜய்க்கும் அமலா பால் இருக்கும் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பின்பு 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
கழுவி ஊத்தும் ரசிகர்கள்
சமீப காலமாக, படு சூடான புகைப்படங்களை பதிவு செய்து வரும் அமலா பால் நாட்கள் செல்ல செல்ல இன்னும் மோசமான கவர்ச்சியை காட்டிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது வெறும் ப்ரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு இரண்டு ஆண் நண்பர்களுடன் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.