விமலா ராமன்
இயக்குநர் கே. பாலச்சந்தரின் பொய் என்ற படத்தின் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விமலா ராமன். இந்த படம் இவருக்கு பெரிய அளவில் கைகொடுக்காவிட்டாலும் அடுத்த சில படங்கள் நல்ல வரவேற்பை தந்தது.
குறிப்பாக இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக ராமன் தேடிய சீதை படத்தில் இவர் நடித்திருந்தார். படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்துவந்த விமலா ராமன்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் சுந்தர்.சியின் இருட்டு என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் 41 வயதாகும் நிலையில் திருமணம் செய்து கொள்ளாத இவர் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கவர்ச்சி புகைப்படம்
அவர் 2008 இல் மோகன்லாலுடன் கல்லூரி குமரன் மற்றும் திலீப்புடன் கல்கத்தா நியூஸ் ஆகியவற்றில் தோன்றினார். விமலா ராமன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள நடனாலயா டான்ஸ் அகாடமியில் பயின்றார். ஜெயலக்ஷ்மி கண்டியாவிடம் நடனம் பயின்றார்.
41 வயதானாலும் தற்போதும் படங்களில் நடித்து வருகிறார் விமலா ராமன். அவர் சமீபத்திய கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.