நடிகை தமன்னா
இவர் 1989 டிசம்பர் 21ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்துள்ளார். சிறு வயது முதல் நடிப்புத் துறையில் மிகவும் ஆர்வம் காட்டி வந்த தமன்னா 2005 ஆம் ஆண்டு ஹிந்தி தெலுங்கு தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.
2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பின்பு அடுத்தடுத்து தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடத் தொடங்கினார்.
அதன்படி தனுசுடன் படிக்காதவன் படத்தில் சூர்யாவுடன் அயன் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 2010 ஆம் ஆண்டு வெளிவந்த பையா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய தமன்னாவின் புகழ் உச்சிக்கே சென்றது.
ஓப்பன் டாக்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தமன்னாவிடம், பள்ளிப்பருவத்தில் ப்ளூ பிலிம் பார்த்து இருக்கீங்களா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து நடிகை தமன்னா , ஒருமுறை தவறுதலாக அந்த படத்தை பார்க்க நேர்ந்தது. என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்.
அப்போது அங்கு இருந்த CD-யை எடுத்து போட்டோம். அந்த படம் ஒளிபரப்பானது. உண்மையில் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் பார்க்கவில்லை என்று தமன்னா கூறியுள்ளார்.