நடிகை சாட்னா டைட்டன்ஸ்
சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டால் ஆளே அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்கள் அந்த வகையில் பிச்சைக்காரன் பட நடிகையும் ஒருவர்.
2016ஆம் ஆண்டு சக்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி திரைப்படம்தான் பிச்சைக்காரன் இந்த திரைப்படத்தில் தீபா ராமானுஜம், விஜய் ஆண்டனி மோகன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சாட்னா.
ஆளே அடையாளம் தெரியல
பிச்சைக்காரன் படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தர் கார்த்தி என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் போது சில பிரச்சனைகள் கிளம்பியதால் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்குப் பிறகு குழந்தை குடும்பம் என சினிமாவை ஓரம் கட்டி விட்டு முழுக்க முழுக்க குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் நடிகை சாட்னா.