நடிகை சங்கீதா
ஒருசில மலையாள படங்களை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் நடித்த பகவத்சிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சங்கீதா. அதனை தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
விக்ரம், சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார் சங்கீதா. இந்நிலையில் நடிகை சங்கீதாவும், பிரபல பின்னணி பாடகர் க்ரிஷும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
பாடகர் க்ரிஷ் முதல் முறையாக கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படம் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். மேலும், அழகிய அசுரா, சிங்கம் 3 முப்பரிமாணம் போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
கிரிஷ் மற்றும் சங்கீதா இருவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து இந்த திருமணமாகி ஷிவியா என்ற பெண் குழந்தையும் பிறந்தார்.
ஓபன் டாக்
தன் குடும்பத்தினர் தனக்கு செய்த கொடுமைகளை பகிர்ந்துள்ளார். சமூதாயத்தில் தான் பிரச்சனை நடக்கும் என்பார்கள். ஆனால் எனக்கு என் குடும்பத்தினரே பிரச்சனை செய்தார்கள். நான் சம்பாதித்த பணத்தை என் குடும்பத்தினர் எடுத்துக்கொள்வார்கள்.
என் அண்ணன்களே என் பணத்தை நாசம் செய்தார்கள் என்றும் குடிபோதையில் என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல் என் பணத்தை செலவு செய்து வந்தார்கள் என்றும் தெரிவித்தார். அவர்களுக்கு செலவு செய்ய வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் சேமிப்பு என்பதே கிடையாது. என் அம்மா கூட என் பணத்தை என் அனுமதியில்லாமல் எடுத்துக் கொள்வார்கள்.
பிளாங்க் செக்கில் கையெழுத்து வாங்கிக் கொள்வார்கள். கிரிஷை திருமணம் செய்தப்பின் தான் எல்லாமே என் வாழ்க்கையில் மாறி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியதாக நடிகை சங்கீதா ஓப்பனாக கூறியிருக்கிறார்.