சாய்பல்லவி
தென்னிந்திய அளவில் பிரபல நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். பின், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ஹீரோவிற்கு ஜோடியாக மட்டும் நடிக்காமல், கதையின் நாயகியாகவும் இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கார்கி படம் கூட பாராட்டை பெற்றது.
இதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துவங்கியது.
படிப்பை முடித்து பட்டம்
இந்நிலையில் இவரது தங்கை பூஜா கண்ணன் பட்டம் பெற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.