ஓவியா
தமிழில் வெளியான களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஓவியா. களவாணி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஓவியாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன.
அதனை தொடர்ந்து கலகலப்பு, மெரினா போன்ற படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஓவியாவுக்கு பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை ஓவியா மிக சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லலாம். பிக் பாஸ் வீட்டில் நடந்த பலவிதமான சம்பவங்களால் நாளுக்கு நாள் ஓவியாவின் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே போனார்கள். ஒருகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் ஓவியவிருக்கு ஆர்மி தொடங்கும் அளவிற்கு பிரபலமானார் நடிகை ஓவியா.
பின்னர் பிக் பாஸ் வீட்டில் நடிகர் ஆராவுடன் ஏற்பட்ட காதல் முறிவால் வீட்டைவிட்டு வெளியேறினார் ஓவியா. அதன்பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிய தொடங்கின.
இப்படித்தான் உடலுறவு கொள்கிறேன்
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் பல கோக்கு மாக்கான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். குறிப்பாக தன்னுடைய உடலுறவு முறை குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர். என்னதான் இருந்தாலும் பொதுவெளியில் இப்படியா சொல்றது..? என ஓவியா-வை விளாசி வருகின்றனர்.
அவர் பேசியதாவது, நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று செய்திகள் பரவுகிறது. ஆனால், அது உண்மை கிடையாது. இதுவரை நான் ஆண்களுடன் தான் உறவு வைத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய உடலுறவு இயற்கைக்கு நேராக தான் இருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக நான் ஓரினச்சேர்க்கையாளராக இல்லை என்றும் கூறியுள்ளார். இதன் மூலம், ஓரினச்சேர்க்கையாளராக இருக்க முடியவில்லையே என்று தன்னுடைய ஏக்கத்தையும் பதிவு செய்துள்ளார்.