நிவேதா பெத்துராஜ்
தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதனை தொடர்ந்து அவர் சங்கத்தமிழன், திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக் , பொதுவாக என் மனசு தங்கம், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை நிவேதா பெத்துராஜ் நிஜ வாழ்க்கையிலும் துணிச்சல் மிக்கவர். ஃபார்முலா ரேஸ் கார் ரேஸ் பயிற்சி முடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் அவரை பெருமளவில் வாழ்த்தியுள்ளனர்.
படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிவேதா பெத்துராஜ் முதல்முதலாக தமிழ் சீரியலில்தான் நடித்துள்ளாராம்.
அதாவது நடிகை நிவேதா மாடலிங் துறையில் இருந்த போது அவருக்கு தமிழில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் முக்கியத்துவம் வாய்ந்த நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில்தான் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் பார்ட்டி என்கிற ஒரு தமிழ் படத்தில் இவர் நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.
இவருக்கு வரவேற்புகள் தற்சமயம் குறைந்து வருவதால் மற்ற நடிகைகளை போல வரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறார். அப்படியாக சமீபத்தில் தனது காரில் அமர்ந்தப்படியே அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன.