மஞ்சிமா மோகன்
இவர் 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்துள்ளார். இவரது தந்தை பெயர் விபின் மோகன் தாயின் பெயர் கிரிஜா ஆகும். இவர் தனது பள்ளி படிப்பினை திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா பவன் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் தனது கல்லூரி படிப்பினை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயகத்தில் சிம்பு நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அச்சம் என்பது மடமையடா” இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் 90 காலகட்டத்தில் இறுதியில் 2000 தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கதாநாயகியாக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்?
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மோசமான அனுபவங்களை குறித்தும். நெட்டிசன்ஸ்களால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதாவது, நான் திருமணத்திற்கு முன்னே கர்ப்பமாக இருந்தேன். திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பமே இல்லை என்ற பொய்யான செய்திகள் பரவியது.
இந்த செய்தி என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் மிகவும் காயப்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் நான் கௌதம் கார்த்திக்கு ஏற்ற ஜோடியே இல்லை என பல பேர் என்னுடைய உடலை வைத்து மோசமாக விமர்சித்திருந்தது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு .
சோசியல் மீடியாவில் திருமணமான ஜோடிகள் திருமண புகைப்படங்கள் வெளியிடுவதை பார்த்து. எனக்கும் அவர்களைப் போன்று ரொமான்டிக்கான புகைப்படங்களை பதிவிட வேண்டும் அப்படின்னு தோணும்.
ஆனால், எங்களுடைய திருமண அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்தே எங்களை மோசமாக பங்கமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.