ரச்சிதா மகாலட்சுமி
சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார்.
இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது.
இந்நிலையில் ரச்சித்தா fire என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டரில் நடிகர் ஒருவர் நடிகையின் அந்த பின்புறத்தில் கைவைத்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.