நடிகை லட்சுமி மேனன்.!
தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகையாக உன் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமிமேனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகைதான் பள்ளி படிக்கும் இப்போது தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். தமிழ் சினிமாவில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் கண்களில் தென்பட ஆரம்பித்தார் இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.
அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து விஷாலுக்கு ஜோடியாக நடித்து வந்ததால் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. விஷாலின் திருமணமும் இந்த காரணத்திற்காக தான் நின்றது என்றும் வதந்திகள் பரவி வந்தது. இப்படி இருக்க இப்பொழுது லட்சுமி மேனன் எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் டான்ஸ், சிங்கிங் என பல திறமைகளை கொண்டிருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
திருமணம் செய்ய போகும் நடிகை லட்சுமி மேனன்
தற்போது சிப்பாய் படத்திலும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 27 வயதாகும் லட்சுமி மேனன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மாப்பிள்ளை பிரபல நடிகர் என்றும் அது அவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் விஷால் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.