நடிகை கார்த்திகா
தமிழில் கோ, அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதா. இவரது மகள் கார்த்திகா ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
பின்னர் அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் நடித்த இவர், சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகை கார்த்திகா கடைசியாக வா டீல் படத்தில் நடித்தார். கடந்த 2016-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் உள்ளது.
அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை. இதனால் 2017-ல் ஆரம்ப் என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்தார். தொடர்ந்து டி.வி தொடர்களில் நடிக்கவும் அழைப்பு வரவில்லை.
ஷாக்கான ரசிகர்கள்
தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி தனது தந்தை நடத்தும் ஓட்டல் தொழிலை கவனிக்க கார்த்திகா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவரைப் போலவே இவரது தங்கை துளசியும் தமிழ் சினிமாவில் கடல், யான் திரைப்படங்களில் கிடைத்தாலும் கடைசி திரைப்படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை தராததால் இருவரும் ஆள் அட்ரெஸ்சே தெரியாத அளவிற்கு தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.