Connect with us

நம்ம கரகாட்டக்காரன் கனகாவா இது..? என்ன இப்படி ஆயிட்டாங்க.. ஒரு காலத்தில் எப்படி இருந்த நடிகை ..! வைரல் புகைப்படம்.!

actress kanaka latest photos 1

சினிமா செய்திகள்

நம்ம கரகாட்டக்காரன் கனகாவா இது..? என்ன இப்படி ஆயிட்டாங்க.. ஒரு காலத்தில் எப்படி இருந்த நடிகை ..! வைரல் புகைப்படம்.!

கனகா

இவர் திரையுலகை விட்டு விலகி சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர் திரையுலகை விட்டு காரணம், காதல் தோல்வி, மற்றும் உடல்நல பிரச்சனை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது நடிகை கனகா வெளியிட்டுள்ள வீடியோ மூலம், அவர் நல்ல விதமாக இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

kanaka 3

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள், கனகா நடிப்பார் என்பதை அவரே எதிர்பாக்கவில்லை என்றாலும், அவரது அழகு இவரை ஒரு திரைப்பட நடிகையாக மாற்றியது. 1989 ஆம் ஆண்டு, இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கையமரன் இயக்கத்தில் வெளியான, கரகாட்டக்காரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

kanaka 2

தமிழ் மட்டும் இன்றி, மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்த இவர் நடிப்பில் வெளியான, காட்ஃபாதர் என்னும் மலையாள திரைப்படம் 434 நாட்கள் ஒடி சாதனை பிரிந்தது. சுமார் 40 மேட்பட்ட படங்களில் நடித்து இவர், கடைசியாக தமிழில், 1999 ஆம் ஆண்டு வெளியான, விரலுக்கு ஏத்த வீக்கம் படத்தில், நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

kanaka 1

புகைப்படம்

மேலும் கனகா யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வீட்டில் வசித்து வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது . இப்படி இருக்கும் நிலையில் வெளியில் முகத்தை காட்டாமல் இருந்து வந்த கனகாவை தேடி கண்டுபிடித்து புகைப்படம் எடுத்திருக்கிறார்,

kanaka 5

நடிகை குட்டி பத்மினி . அந்தப் புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் நடிகை கனகாவா இது .? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே என்று கூறி வருகின்றனர்.

kanaka 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top