நடிகை துஷாரா விஜயன்
கோலிவுட் திரையுலகில் சில படங்களிலேயே நடித்து மிகவும் பிரபலமான கதநாயகிகளின் வரிசையில் துஷாரா விஜயனும் ஒருவராவார். மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்த துஷாரா, 2019ஆம் வருடம் இவர் கதாநாயகியாக ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற்றாலும் துஷாராவின் நடிப்பு பாராட்டப்பட்டது. இதன்பின் பட வாய்ப்பிற்காக காத்திருந்த துஷாரா, பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா நடிப்பில் வெளியானது ‘சார்பட்டா’ திரைப்படம். படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.
இதன்பின் துஷாரா அநீதி, நட்சத்திரம் நகர்கிறது, அன்புள்ள கில்லி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் விமர்சனரீதியாக அதிக அளவில் பேசப்பட்டாலும் வசூல்ரீதியில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிச்சல் உடை
இப்படி இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இருந்து அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த துஷாரா விஜயன் தற்போது நீச்சல் உடை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன மாரியம்மா இது .? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.