சைத்ரா ரெட்டி
கன்னட மாடலழகியான சைத்ரா ரெட்டி தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
இந்த தொலைக்காட்சி சீரியல் மூலமாக பிரபலமாகி மக்களின் மனதை கவர்ந்து மக்களுக்கு பிடித்த வில்லியாக நடித்து வந்தார். இதன் பிறகு தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து மேலும் பல ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
30 வயதாகும் இவருக்கு லயா ராகா என்ற அக்கா குழந்தை இருக்கிறது. குழந்தையை கொஞ்சும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருவார்.
Open Talk
வலிமை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதை பார்த்தபோது அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வலிமை படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றிய பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் நடிகர் அஜித் உடனான அனுபவம் குறித்தும் பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, அஜித் சாரை பார்க்கும் வரை அவரிடம் அதை பேச வேண்டும் இதை பேச வேண்டும் அதைக் கேட்க வேண்டும் இதை கேட்க வேண்டும் என ஏகப்பட்ட கேள்விகள் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், அவரைப் பார்த்து அடுத்த நொடிய அப்படியே நாம் பிரமித்து நின்று விடுவோம். அவரிடம் என்ன பேசுவது.. நாம் எங்கு இருக்கிறோம்.. என்று எதுவுமே தெரியாது.. எங்கோ பறப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படும்.
கடைசியாக, நான் படப்பிடிப்பில் சில காட்சிகளில் தவறு செய்து விட்டேன். அப்பொழுது நான் மிகவும் சோகமாக உணர்ந்தேன். ஆனால், அஜித் சார் என்னிடம் வந்து படப்பிடிப்பு தளத்தில் தவறுகள் நிகழ்வதெல்லாம் சாதாரணம். இதற்காக நீங்கள் கஷ்டப்பட வேண்டியது கிடையாது என கூறினார்.
அதன் பிறகு, வேண்டுமென்றே சில காட்சிகளில் தவறாக நடித்தார். மேலும், என்னிடம் வந்து பாருங்கள் நான் எத்தனை படங்களில் நடித்திருக்கிறேன்.. எனக்கு சில நேரங்களில் தவறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி என்னிடம் சிரித்தார். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. சார் நீங்கள் வேண்டுமென்றேதான் அதை நீங்கள் செய்தீர்கள்.. நீங்கள் தவறாக செய்யக்கூடிய ஆள் கிடையாது.. எனக்கு தெரியும் என கூறினேன்.
ஆனாலும் தன்னுடன் நடிக்க நடிகர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையை நான் கற்றுக் கொண்டேன். அதை என்னுடைய வாழ்க்கையிலும் பின்தொடர முயற்சி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் சைத்ரா ரெட்டி.