அனுஷ்கா
இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இரண்டு திரைப்படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பை தரவில்லை.
இதனால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் அருந்ததி திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார். இதனை அடுத்து விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு அதன்பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் மேலும் பல ஹிட் திரைப்படங்களிலும் நடித்து வந்த இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
போட்டோஸ்
இந்த திரைப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை உயர்த்திய நிலையில் பிறகு அந்த எடையை குறைக்க முடியவில்லை மேலும் இவர் பல முயற்சிகள் செய்தும் இவரால் பழைய நிலைமைக்கு வர முடியாத காரணத்தினால்
திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவருடைய இளம் வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.