நடிகை அஞ்சலி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவில் பிறந்து வளர்ந்த அஞ்சலி 2007ம் ஆண்டு வெளியான “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
அதன் பின்னர் இவர் நடித்த “அங்காடி தெரு” படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. தமிழில், சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டிவிட்டு ஐதராபாத்’ல் செட்டில் ஆனார்.
இடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து வந்த அஞ்சலி ஒரே வீட்டில் இருவரும் இருந்து வந்துள்ளனர். அதன்பின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
அடடே இது என்ன புது பாலிசியா இருக்கே.?
நடிகை அஞ்சலி தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதன் காரணமாக தான் அஞ்சலி படங்களில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
நெருக்கமான காட்சியில் நடிப்பது கடினமா அல்லது முத்தம் கொடுக்கும் கட்சியில் நடிப்பது கடினமா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை அஞ்சலி உடனே தான் அந்தரங்க காட்சியில் நடிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார். நான் எல்லா காட்சிகளிலும் நடிப்பதாகத்தான் எண்ணுகிறேன்.
ஆனால் அது ஒரு நெருக்கமான அந்தரங்க காட்சியாக வரும் போதுதான் அது என்னுடைய எல்லையை மீறி செல்லும் போது சில சமயங்களில் நான் கேரவனுக்குச் சென்று அழுதிருக்கிறேன். ஆனால் நான் ஒப்புக்கொண்ட பிறகுதான் அந்த காட்சி எடுக்கப்பட்டு இதனால் நாம் அதனை நடித்து கொடுத்தான் ஆக வேண்டும்.
ஒரு பெண் தனக்கு உறவு வேண்டுமா? அல்லது தொழில் வேண்டுமா என்று யோசிக்க வேண்டும். ஒரு ஆணுக்கு திருமணம் முடிந்து தொடர்ந்து வேலை செய்ய முடிந்தால், பெண்ணாலும் முடியும் என்று நம்பிக்கையுடன் அஞ்சலி பேசியுள்ளார்.