ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா.
அவர் அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்பரூபம், தரமணி, வட சென்னை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி நடிகையாக உள்ளார்.
பிறகு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதன் மூலமாக நிறைய படங்கள் தற்சமயம் நடித்து வருகிறார். இதில் நடிகர் கமலுடன் விஸ்வரூபம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் மட்டுமல்லாது அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது இதில் நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.
தற்போது இவர் நடிப்பின் பிசாசு 2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைப் போலவே அனல் மேலே பனித்துளி , மாளிகை மற்றும் சொல்லக் கூடாத உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கும் ஆண்ட்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஹாலிவுட் படங்களில் நாயகிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.
கழட்டிவிட்ட அனுரூத்
இவர் சினிமா வாழக்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் பலருடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரியா பிரபல இசையமைபாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்து கேரியரில் கவனம் செலுத்தி வந்தனர். 37 வயதான ஆண்ட்ரியா, 68 வயதான முன்னணி நடிகர் கமல் ஹாசனுடன் ரகசிய உறவில் இருந்தாராம்.
இதனால் தான் கமல் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் ஆண்ட்ரியாவை நடிக்க வைத்தாராம். ஆனால் கமல் ஹாசன் எந்த நடிகையும் வற்புறுத்தி ரகசிய உறவு வைத்துக்கொள்ள மாட்டார் நடிகைகள் விருப்பப்படி தான் அவரிடம் செல்வார்கள் என்று பிரபல பத்திரிகையாளர் சமீபத்தில் கூறியுள்ளார்.