யோகி பாபு
பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வருகின்றார். அவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஓரிரு படங்களிலாவது ஹீரோவாக நடித்து விடுகிறார். இவர் நடித்த பீஸ்ட், கோலமாவு கோகிலா, லவ் டுடே, கோமாளி போன்ற பல படங்களில் இவரது கதாபாத்திரம் பலராலும் பேசப்பட்டு வந்தது.
இவர் ஹீரோவாக நடிக்கின்ற படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுக்கின்றனர். இவரது கவுண்டர்களுக்கும், மேலும், யோகி பாபு ஒரு காலத்தில் வாய்ப்பைத் தேடி அலைந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து விடாமுயற்சியுடன் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
இவர் 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன் தான் திருமணம் ஆகி குழந்தை பிறந்தது. மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்ட யோகி பாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபடுவார்.
அட யார்யா நீயு ..?
இந்த நிலையில் தற்பொழுது யோகி பாபு அவர்களைப் போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு உள்ளது அந்த நபர் யோகி பாபு போலவே கட்டையாகும் குட்டையாகும் சுருட்டை தலையுடனும் காணப்படுகின்றார்.
இந்த நபரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அட யோகி பாபு போலவே இருக்கின்றாரே யோகி பாபு அவர்களுக்கு நடிப்பில் டாப் கொடுப்பாரோ என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு உள்ளது.