Connect with us

எலும்பும் தோலுமாக மாறிப்போன நடிகர் விஜயகாந்த்.! லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்.!

Untitled Project 8 1

சினிமா செய்திகள்

எலும்பும் தோலுமாக மாறிப்போன நடிகர் விஜயகாந்த்.! லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்.!

கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் கேப்டன் என்றாலே நமக்கு முதலில் தோன்றுபவர் விஜயகாந்த் இவர் 80 ,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக விளங்கினார் இவர் நடிக்கும் காலகட்டத்தில் கமல், ரஜினி போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அவர்கள் எல்லாம் நடுநடுங்க வைத்தவர் விஜயகாந்த் .

vijayakanth 735x400 1

இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. வல்லரசு, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் இவர் பேசிய அனல்பறக்கும் வசனங்கள் இன்றுவரை பிரபலம். மேலும் இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா திரைப்படம் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றே கூறலாம். இவர் ஆரம்ப காலத்திலிருந்தே அரசியலில் படங்களை அதிகம்  தேர்ந்தெடுத்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரவேசம் கண்ட இவரை கருப்பு எம்ஜிஆர், கேப்டன் என செல்லமாக அழைத்து வந்தனர் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள். இதுவரையிலும் தமிழ் சினிமாவில் 156 படங்களில் நடித்துள்ளார்.

vijaykanth9

லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்

கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகர் விஜயகாந்த். சமீபத்தில் இவருக்கு நடந்த சிகிச்சை ஒன்றில் இவரின் கால் விரல்கள் அகற்றப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது. கம்பீரமாக திரையில் பார்த்த நடிகர் விஜயகாந்தை, தற்பொழுது இந்த நிலையில் பார்க்கும் அவரது ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர். தற்போது நடிகர் விஜயகாந்த்தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijayakanth

vijayakanth1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top