நடிகர் ரோபா ஷங்கர்
விஜய் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு தனது மிமிக்ரி திறமையை காட்டி மக்களை கவர்ந்தவர் தான் நடிகர் ரோபா ஷங்கர். சின்னத்திரையில் பிரபலமாக வலம் வந்த இவர் வெள்ளித்திரையிலும் நடிக்க பட வாய்ப்புகிடைத்தது.
சமீபத்தில் ரோபோ ஷங்கர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்த படி இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நடிகர் ரோபோ ஷங்கர் சமீபத்தில் அவரது மகள் இந்திரஜா திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். ரோபோ ஷங்கர் மகள் பிகில் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருப்பதால் மிகவும் பிரபலமான ஒருவர் தான். அவரை சொந்த தாய்மாமா முறை கொண்ட கார்த்திக் என்பவரை தான் கரம் பிடித்தார்.
அவர்கள் இருவருக்கும் சுமார் 15 வயது வித்தியாசம் இருக்கிறதாம். இருந்தாலும் ஓகே என ரோபோ ஷங்கர் மகள் திருமணத்தை அதிகம் செலவு செய்து நடத்தி வைத்து இருக்கிறார்.
இவ்ளோவா?
இந்நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. இது திருமண பங்க்ஷன் போன்று இல்லை. திருவிழா போன்று இருந்தது. நாங்கள் எதிர்பார்த்தது 3000 பேர்தான், ஆனால் நிகழ்ச்சியில் 9000 மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவின் ரிசப்ஷனுக்கு மட்டுமே கிட்டதட்ட 1.5 கோடி செலவாகி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.