நகுல்
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நகுல். நடிகை தேவையானியின் உடன் பிறந்த சகோதரரான இவர், பாய்ஸ் படத்தில் நடித்தபோது குண்டாக இருந்தார். பின்னர் கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த நகுல், கோலிவுட்டில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார்.
இவர் முதன்முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் காதலில் விழுந்தேன். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய அதில் இடம்பெற்ற பாடல்களும் முக்கிய காரணம். குறிப்பாக அப்படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்த நாக்கு முக்க பாடல் உலகளவில் வைரல் ஆனது.
அப்பாடல் வெளிவந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றளவும் அப்பாடலை கேட்டவுடன் நடனமாட தூண்டும் அந்த அளவுக்கு டான்சிங் வைப் உடன் கூடிய அப்பாடலுக்கு தன்னுடைய அசத்தலான நடனத்தால் உயிர் கொடுத்திருந்தார் நகுல்.
அதோடு அப்பாடலை வைத்தே அப்படத்தை புரமோட் செய்து வெற்றி கண்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
போட்டோக்கள்
கடந்த 2016-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது, தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளன. அவரது திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.