நடிகர் கருணாஸ்
தமிழ் சினிமாவில் நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டியாக, காமெடி நடிகராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் கருணாஸ். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த அவர் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
மேலும் கருணாஸ் பல இசை நிகழ்ச்சிகளையும், கானா பாடல்களையும் பாடி வருகிறார். அதுமட்டுமின்றி கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்த அவர், திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.
சிறந்த நகைச்சுவை நடிகராக அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர்.இவர் மனைவி கிரேஸ். இவர் ஒரு சிறந்த பாடகி ஆவார்.சீனா தானா,திண்டுக்கல்லு திண்டுக்கல்லு என குத்து பாடல்களை பாடியுள்ளார்.
புகைப்படங்கள்
இவர் தற்பொழுது தனது சொந்த ஊரில் 14 ஏக்கர் நிலத்தின் வைத்துக் கொண்டு மிகப்பெரிய ஒரு தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் ஆடு, மாடு நாய்கள் என்ன பண்ணையும் வைத்து முழு நேர விவசாய மாறி உள்ளார்.
அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது வாயிலாக பரவப்பட்டு வருகிறது.