நடிகர் கருணாஸ்
தமிழ் சினிமாவில் நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டியாக, காமெடி நடிகராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் கருணாஸ். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த அவர் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
மேலும் கருணாஸ் பல இசை நிகழ்ச்சிகளையும், கானா பாடல்களையும் பாடி வருகிறார். அதுமட்டுமின்றி கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்த அவர், திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.
சிறந்த நகைச்சுவை நடிகராக அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர்.இவர் மனைவி கிரேஸ். இவர் ஒரு சிறந்த பாடகி ஆவார்.சீனா தானா,திண்டுக்கல்லு திண்டுக்கல்லு என குத்து பாடல்களை பாடியுள்ளார்.
புகைப்படங்கள்
இவர் சினிமாவில் குறைந்த அளவே பாடல்கள் பாடி இருந்தாலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்.இவர் கருணாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,
தற்போது இவர் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண புகைப்படத்தினை கருணாஸ் மகன் கென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அக்காவுக்கும் மாமாவுக்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். மேலும் இருவரின் ஜோடி பொருத்தமும் சூப்பர் என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.