டிங்கு
1985ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த படம்தான் ஜப்பானில் கல்யாணராமன். இந்த படத்தில் உலகநாயகன் கமலுடன் ஒரு குட்டி பையன் நடித்திருப்பார். அவர் பெயர் தான் டிங்கு இவர் வேறு யாரும் இல்லை, கோலங்கள், திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர்தான்.
மேலும் இவர் நடிகர் போஸ் வெங்கட்டின் மச்சான் முரையாவர். டிங்கு 1978ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தற்போது 39 வயதாகும் டிங்கு ஜாப்பானில் கல்யாண ராமன் படத்திற்கு முன்னர் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு செம்ம ஹிட் படமான வைதேகி காத்திருந்தால் படத்திலும் நடித்திருந்தார்.
ஆனால் இவருக்கு நல்ல பெயர் எடுத்து கொடுத்தது கமலின் கல்யாணராமன் படம்தான். அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. மாறாக சின்னத்திரை பக்கம் திரும்பினார். 2004ல் சன் டிவியில் ஒளிபரப்பான மெகா சீரியல் கோலங்கள் நாடகத்தில் நடித்தார். இந்த நாடகத்தில் அர்ஜுன் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் டிங்கு.
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…?
இந்நிலையில் 2000-ம் ஆண்டு சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்த திருமண வாழ்க்கை சில கருத்து வேறுபாடு காரணமாக 2010-ம் ஆண்டு இருவரும் சட்டப்படி பிரிந்தனர்.
இப்படி இருக்கையில் கவிதா என்பவரை அதே ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் சென்று வாழ்க்கையை தொடங்கி விட்டார். மேலும் தற்போது நடிப்பைத் தவிர்த்து நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
விரைவில் தமிழ் சினிமாவில் பணிபுரிய வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.