நடிகர் பரத்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று காலத்தால் அழியாத காதல் காவியமாக இருக்கும் திரைப்படங்களில் ஒன்று “காதல்” . இந்த படம் 2004 ம் ஆண்டு வெளியானது. இதில் நடிகர் பரத் மற்றும் நடிகை சந்தியா தங்களது நடிப்பு திறமையை பெருமளவில் வெளிக்காட்டி இருப்பார்கள். மேலும், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டு வசூல் சாதனையும் குவித்தது .
அதை தொடர்ந்து பலவேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார் பரத். இயக்குனர் பேரரசு இயக்கத்தில் பழனி, 555 போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் பரத். ஆனால் அண்மைக்காலமாக இவரது நடிப்பில் வெளிவரும் படங்கள் சரியாக ஓடாததால் வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார் பரத். இந்நிலையில் கடந்த 2013 இல் துபாயில் வளர்ந்த மலையாளி டென்டிஸ்ட் பெண்ணான ஜெஷ்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அழகான இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.
பரத்தின் தங்கை
இந்நிலையில், நடிகர் பரத் தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.