அர்ஜுன்
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன். அவர் தேசப்பற்று மிக்க, சமூக கருத்துகளை கொண்ட எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களால் ஆக்சன் கிங் என அழைக்கப்பட்டார்.
ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பலவற்றிலும் நடித்த அவர் தொகுப்பாளராக அவதாரம் எடுத்து சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஐஸ்வர்யா, விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டத்து யானை படத்தில் அவருக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஆனால் முதல் படத்தை அடுத்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. ஆனாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு நாயகியாக இவர் உள்ளார். ஆனால் அர்ஜுனின் இரண்டாவது மகள் குறித்து எந்த ஒரு தகவல்களும் வலைத்தளங்களில் வருவது இல்லை.
பிரபல நடிகையிடம் அத்துமீறி நடந்தாரா அர்ஜுன்
ஜெய்ஹிந்த், கர்ணா, பொம்மலாட்டம் படத்தில் அர்ஜுன் நடிகை ரஞ்சிதாவுடன் சேர்ந்து நடித்திருப்பார். அர்ஜுன் படப்பிடிப்பில் ரஞ்சிதாவிடம் தவறாக நடந்து கொண்டார் என்று செய்திகள் வெளிவந்து. இந்நிலையில் இது பற்றி பேசிய பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், “இந்த விஷயங்கள் முற்றிலும் பொய். அர்ஜுன் ரஞ்சிதாவிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.