நடிகை ஆச்சி மனோரமா
நாடகத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையாக உருவெடுத்தவர் மனோரமா. இவர் காமெடி, குணச்சித்திர வேடங்கள் என்று பல கதாபாத்திரங்களின் நடித்துள்ளார். இவரின் திரையுலக வாழ்க்கையில் பல மொழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்தவர்.
எம்.ஜி.ஆர் காலம் தொட்டு சிவாஜி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், கமல், ரஜினி, அஜித், விஜய், தனுஷ் என 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்த நடிகை என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவரை பலரும் ஆச்சி என்று அழைத்து வந்தனர்.
அவர் நடித்த முதல் படம் சில காரணங்களால் வெளிவராமல் போக, பின்னர் கண்ணதாசன் இயக்கிய மாலையிட்ட மங்கை, அவரது அறிமுக படமாக வெளிவந்து அவரை புகழடையச் செய்தது. திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா, சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
முதன் முறையாக வெளியான புகைப்படம்
இவருக்கு ஒரு பேத்தியுள்ளார் அவரின் பு கைப்படமானது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது இதோ அந்த புகைப்படம் ..