நடிகை மோனிகா
தமிழ் சினிமாவின் தளபதியாக திகழ்கிறார் நடிகர் விஜய். தமிழ் மட்டும் இல்லாது இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் விஜய்யும் ஒருவர்.
விஜய் நடித்து பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றிபெற்றிருந்தாலும் ஒருசில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதுபோன்ற படங்களில் ஒன்றுதான் KS ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் முதன் முதலில் நடித்த மின்சார கண்ணா திரைப்படம்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரம்பா மற்றும் மோனிகா காஸ்ட்லினோ நடித்திருந்தனர். முக்கியமான கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்திருந்தார்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக, குஷ்புவுக்கு தங்கையாக நடித்தவர்தான் மோனிகா காஸ்ட்லினோ. மின்சார கண்ணா படத்திற்கு பின் இவர் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்த இவர் அங்கும் வெற்றி பெற வில்லை.
நடிகை மோனிகாவின் தற்போதைய நிலை
மோனிகா கடந்த 2010ஆம் ஆண்டு துணை இயக்குனரான சத்ய பிரகாஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட ஓராண்டிலேயே விவாகரத்து பெற்றுவிட்டனர்.
விவாகரத்திற்கு பின் படங்களில் நடிக்க வாய்ப்பு வராததால் சின்னத்திரை பக்கம் சென்றுள்ளார். 2009ம் ஆண்டு சீரியலில் நடிக்க தொடங்கிய மோனிகா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.